தமிழீழ எழுச்சி
எங்கே செல்கிறது தமிழீழ எழுச்சி?
தமிழரின் தாகம்
தமிழீழ தாயகமென சுடர்விட்ட எழுச்சி
அரசியலில் பிழைப்போனால்
ஆதரவில்லா அனாதையென
நிற்கதியற்று நிற்கிறது!
குடவோலை முறையை உலகுக்கு காட்டிய
தமிழக அரசியலோ இன்று
ப(ல)ணமுதலைகள் கையில்
சிக்கித்தவிக்கிறது!
மக்களை மரமண்டைகளாக்கி
அரசு ஊழியர்களை அறிவிளியாக்கி
விளையாட்டாய் விளம்பரமாகிறது
இன்றைய அரசியல்!?
தம் கொள்கையரியா
கோமாளி நடத்தும் கொடுங்கோலாட்டம்!
முன் ஆட்சியிலிருந்து, முடிந்தவற்றை முழுங்கிய
கையாலாகாதவன் நடத்தும் அரசியல் பிழைப்பாட்டம்!
தற்பொழுது ஆட்சியிலிருந்து செய்யத் தவறும்
அரசு நடத்தும் காழ்ப்புணர்ச்சியாட்டம்!
தலைவர் வருவார், வருவாரென
தலைகள் நடத்தும் தலைக்காப்பாட்டம்!
கனடாவில் இகழ்ச்சி, இங்கோ புகழ்சியென
காளான் நடத்தும் காமெடியாட்டம்!
கொத்து, கொத்தாய் கொன்று குவிக்கையில்
மதிகெட்ட நாடுகள் நடத்தும் மட்டைப்பந்தாட்டம்!
அண்டைநாடு, அண்டைநாடென்று
என் தாய் நாடு நடத்தும் சூதாட்டம்!
இங்ஙனம், இவையனைத்தும் கல்லாட்டமென முடிகையில்
நாமோ,
கல்லாட்டம் கரிகரியாய் போய்
நல்லாட்டம் நமக்கே வருமென
நட்டமும், நாட்டமுமின்றி நாறிக்கொண்டுருக்கிறோம்!