தழும்பு
நான் பட்ட அவமானங்கள் என்னை பல காலம் தனிமை படுத்திவிட்டன
அன்னியர் அடித்தால் காயங்கள் ஏற்படும்
உறவினர் அடித்தால் தழும்புகள் ஏற்படும்
காயங்கள் சில நேரம் தழும்புகள் பல நேரம்
மரத்து போனது உடலும் உள்ளமும்
ஒடுங்கி நிற்கின்றேன் அடிப்பவர் ஓய்வெடுக்க .