மகாகவி பாரதி
அநியாய, அக்கிரமங்களை
அடக்கப் பிறந்த
அற்புதகவி!
ஆவேசம் கொண்ட நம் ஆட்களையும்
ஆண்ட ஆங்கிலேயர்களை
ஆட்டிப்படைத்தகவி!!
இல்லையென வந்து
இல்லாத ஒன்றை இயற்றி, அர்ப்பப்பரிசுகளில்
இன்புராகவி!!
ஈன்ற செல்வத்தில் புத்தகத்தை மட்டுமே
ஈட்டி, கொடுக்கப்பட்ட
ஈகைக்கவி!!
உருவக, உவமேயமில்லா
உயிருள்ள, உன்னதமான
உண்மைக்கவி!!
ஊடகமின்றியும்
ஊர் ஊராய் புகுந்து தைரியம் கொடுத்த
ஊக்ககவி!!
எல்லா சாதி, மதத்தினையும் சமமென
எடுத்துக்காட்டிய
எளியகவி!!
ஏழ்மையில் வயிறையும் நிரப்பாமல்
ஏட்டை நிரம்பிய
ஏழையின்கவி!!
ஐயமின்றி பெண்கள் வாழ
ஐங்கரனாய் பலம் கொடுத்த
ஐயமில்லாகவி!!
ஒற்றுமையை மட்டுமே
ஒரேகுறிக்கோளாய் எடுத்துக்காட்டிய
ஒப்பற்றகவி!!
ஓடிவிட்ட காலங்களையும் வென்று
ஓங்கி நிற்கும்
ஓய்வில்லாகவி!!
ஒளவையார் சுவைத்த நெல்லிக்கனியை விட
இனிது உன்கவி!!
அஃதே மகாகவி பாரதி!!