அழகிய தமிழே !

அழகிய தமிழே ! செந்தமிழே! போற்றிபோற்றி !

இளநீரினும் குளுமையான இளந்தமிழே !
உன் இளமை யாருக்குமில்லை யான் அறிந்தவரை;

தேனினும் மிக்க சுவைக்கொண்ட தேன்தமிழே !
அமுதத்தைக் காட்டிலும் உன் சுவை உயர்ந்ததென்பேன் ;

உலகத்திற்கு அறிவொளி வீசும் கதிரவனே !
உன் அருளாலே உலகம் ஒளிர்கிறது;

பகைவரால் அழிக்க முடியாத மறத்தமிழே!
உலகழிந்தலும் உனக்கு அழிவில்லை ;

மாலை நேரத்து குளிர் தென்றலே !
உன்னை நினைக்கும் பொது என் மனம் குளிர்கிறது;

தேவர்கள் வணங்கும் தெய்வத்தமிழே !
உன்னை வணங்கினால் எமக்கு எந்நாளும் பொன்னாளே;

பசுமை பொங்கும் உயர்ந்த பைந்தமிழே!
உன் செம்மைக்கு நிகர் ஏதுமில்லை;

களிமழையே! நறுந்தேனே! பழந்தமிழே!
உன்னை நினைத்தால் பசி நீங்கும் ! பிணி நீங்கும்!

தமிழ் வாழிய வாழியவே!

எழுதியவர் : தமிழவன் (3-May-12, 11:16 am)
சேர்த்தது : தமிழவன் சங்கர்
பார்வை : 496

மேலே