படியில் பயணம் நொடியில் மரணம்

என்னடா குமரேச பள்ளிக்கூடம் வரலயா?.
இன்னைக்கு ஆயக்கரன்புலத்து கெவர்மெண்ட் ஸ்கூலுல ஆண்டுவிழா நான் அங்கே போறன். நீயும் வாரியா, இல்லடா நீ போ நேற்றெ சொல்லி இருந்த நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வாந்திருப்பேன். சரி, நான் போறேன் என்று திருத்துறைபூண்டி செல்லும்பேருந்தில் ஏறினான், பேருந்து கூட்டமாகத் தான் இருந்தது. அதனால் படியில் நின்றுகொண்டிருந்தான் குமரேசன். பேருந்து புறப்பட்டது விடைப்பெற்று சென்றான். நான் எங்கள் பள்ளிக்குச் சென்றேன். அவன் சென்ற பேருந்து எதிரே வந்த ஒரு வகனத்துக்கு ஒரம் ஒதிங்கி செல்லும் போது ஓரத்தில் இருந்த ஒரு சிமெண்ட்டாலான அன்புடன் அழைக்கிறோம் பலகையில் படியில் நின்ற குமரேசன் தலையி அடித்து கீழே விழுந்தான். தஞ்சை மருத்துவமனையில் சுய நினைவு இல்லாமல் இருந்து பிறகு 15 நாள் கழித்து பிழைத்துக்கொள்வான் என்ற தகவல் மருத்துவரால் அறியப்பட்டோம். ஆகவே தோழர்களே இனியாரும் படியில் பயணம் செய்ய வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன்

நன்றி எழுத்து.காம்

எழுதியவர் : ஆதனூர் செ.வீர அழகிரி (5-May-12, 11:57 am)
பார்வை : 962

மேலே