தங்கையின் திருமணம்
மணநாள் குறித்த நாள் முதல்
ஆனந்தம்
இரு உள்ளங்களில் மட்டுமல்ல
குடும்பங்களிலும்
முன்னிருந்து திருமணம் பல
நடத்திருந்தாலும்
ஒரு அச்சம்
ஒரு பரபரப்பு
பெற்றோரிடத்தில்
முகூர்த்த சேலை எடுக்கும் பரபரப்பு
முடிந்த பாடில்லை
சில உறவினர்களாலும்
பல நண்பர்களாலும்
அனைத்தும் இனிதே நடந்தது
அனைவரையும் நினைவு கூர்ந்து
அழைப்பிதல் கொடுத்தது
அசாதாரியம்
பல்லாயிரம் மக்களால்
திருமண மண்டபம் நிறைந்தது
திருமணம் இனிதே நடந்தது
அறுசுவை உணவு
மணவீட்டாரின் கனிவான உபசரிப்பு
வாழ்த்த வந்த நெஞ்சங்களில் களிப்பு
சில நெஞ்சங்களில் ஏனோ
பூரிப்பு இல்லை
"திருமணத்தில் அனைவரையும்
திருப்தி படுத்த நினைப்பவன் முட்டாள் "
அனுபவித்தவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது
தங்கைஐ புகுந்த வீட்டில் அமர்த்திவிட்டு
திரும்பும் நேரத்தில்
தங்கையின் கண்களில் நீர்
மாப்பிள்ளை வீட்டின்
நான்கு தலைமுறை முயற்சிக்குப்பின்
தங்கையின் முகத்தில் ஆனந்தம்
எங்கள் முகத்திலும் ஆனந்தம்
அவள் சிரிததிற்காக மட்டுமல்ல
அவளை இன்னொரு அன்னை இல்லத்தில்
சேர்ததுக்காக