உனக்கு மட்டும் என் கடிதம்
பெண்மை..
என்ற பெயருக்கு
"சந்தேகம்" என்ற அடைமொழி உண்டு..
தன்னால் வெளிப்படுத்த தெரியாத
ஒரு அன்பின் ஆதங்கம்...
தனக்கானவன் தனக்கே
என்ற ஆழமான அன்பின் சுயநலம்..
உனக்காக நான்
உன் நினைவிலேயே நான்..
உன் வருகைக்காகவே நான்..என்ற காத்திருப்பு..!!!
இதற்கெல்லாம் ஒரு பெயர் வைத்து
ஒரு பென்மையையை அன்பாக அழைத்தால்
அதன் பெயர்
உனக்காகவே நான் வாழ்கிறேன் என்பது தான்...
அதன் பெயர் "சந்தேகம்" அல்ல..-இதை
எப்போது சுகமாக நேசிக்கபோகிறாய்
அன்பே.........??!!!