வெற்றிச் சிந்தனைகள்

வாழ்க்கை வாழ்வது
மகிழ்ச்சியின் போது மட்டுமே!

ஆனால்..
வாழ்க்கையை உணர
துன்பத்தின் போது மட்டுமே!

ஒரு வேலையைப் பலமுறை
செய்கிறான்
சாதாரண மனிதன்.!

ஆனால்..
ஒரே முறை பல வழிகளில்
செய்கிறான்
குறிக்கோள் உள்ளவன்.!

ஆயிரம் தோல்விகளைச்
சந்தித்துவிட்டு
விலாசம் கேட்டு
வாசல் தேடி வந்தவர்கள்
வெற்றிச் செல்வங்கள்!!

தோல்வியின் தாக்கம்
ஒவ்வொரு நாளும்
சுறு சுறுப்பாக்கும்!!

ஆனால்..
வெற்றின் மகிழ்ச்சி
ஒவ்வொரு நாளும்
சோம்பேறியாக்கும்

தோல்வியில்
தோரணங்கள் கட்டி
விழா அமைப்போம்
வெற்றியோடு ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (5-May-12, 2:08 pm)
பார்வை : 440

மேலே