என் மனைவிக்கு பிடிக்(காது)கும்
அன்பென்னும் வார்த்தைக்கு அர்த்தம்
என் மனைவியிடம் கற்றுகொண்டேன்
அரவணைப்பு என்னும் சுகத்தை நித்தம் தந்தாள்
அத்தான் என்ற சொல்லுக்கு உயிர்தந்தாள்
ஆசையாய் பேசிடு என்றழைப்பாள்
என் தாய் தந்தை குழந்தை நீதான் என்பாள்
அருகில் இருந்தால் அமைதி தருவாள்
தூரத்தில் நான் இருந்தால் அலைக்கழைப்பாள்
பாவம் என் மனைவியும் நானும்
திருமணமான(பார்த்த) அன்று முதல் இருவரும்
அவரவர் வீட்டில்
இன்னும் சேர்த்து வைக்கவில்லை
எங்களை
எங்கள் வீட்டில்…
ஏன்னா?
நாங்கள் காதலர்கள்
மன்னிக்கவும்
இந்த வார்தை என் மனைவிக்கு பிடிக்(காது)கும்