மனவளக்கலை
பற்றதனைப் போக்கி விடும்
பக்குவம்
வளர்த்து விடும்...
சித்தம் அழுக்காக்கும் சிந்தனையைச்
சீர் செய்யும்..
வாழ்க்கை வளமாக்கும்
வழியதனைத் தெளிவாக்கும்..
வித்தை பல
சொல்லி வைத்த
வேதம் அது புரியவில்லை..
இயற்கையிலே கிடைக்கும் - என
எழுதி வைத்த வள்ளல் - அவர்
வேதம்
சொல்லித்தந்த
வேதாத்திரி மகான்...
பொருள் தேடும்
எனைத் திருப்பி
அருள் தேட அருள் புரிந்த
அருட்தந்தை...
அவர்
சொல்லித் தந்த சூத்திரம்தான்
சொல்லிடுவேன் கேட்டிடுவீர்...
நெற்றியிலே பொட்டிருக்கும்
நினைவங்கே
நிறுத்திடுவீர்...
உச்சியிலே ஒளிதெரியும்
உயிர் அங்கே
ஏற்றிடுவீர் ...
முட்டி வரும்
சக்தியெல்லாம்
விட்டம் அதைத் தொட்டுவிட்டால்..
மூலம் அதைப்
பார்த்திடுவீர்..
மோட்சம் அங்கே பெற்றுடிவீர்..
பொருளதனைத்
தேடித் தேடிப்
புறம் போக்காய்
வாழாமல்
அருள் அதனைத்
தேடுகின்ற
அகத்தவமும் செய்துடுவீர்...
சுக்கிலத்தைத்
தாதாக்கிச்...
சுந்தரனாய் வாழ்ந்திடவும்..
காயம்
காத்திடவும்
காயகற்பம்
கற்றிடுவீர்...
அப்பனைப் போல்
காக்கும் அந்தக்
காப்பதனைக்
கற்றிடுவீர்..
எப்பொழுதும் நினைவினிலே
சங்கல்பம் செய்திடுவீர்..
பத்தினியை வாழ்த்திடலாம் - பெற்ற
மக்களையும் வாழ்த்திடலாம்..
உயிர்க்கலப்பாம் உடன் பிறப்பை
ஒவ்வொன்றாய் வாழ்த்திடலாம் ...
சுற்றி வாழும் நண்பரையும்,
இடர் புரியும் எதிரியையும் ..
வற்றிவிடா இன்பமுடன்
வாழ்க நீ வளமுடன் - என
வாழ்த்தி நாமும் வாழ்ந்திடலாம்..
கற்றதெல்லாம்
கற்றபடி
சாதகமும் செய்து வந்தால் ..
மனக்கவலைத் தீர்த்திடலாம்
மனவளத்தைக் காத்திடலாம்..
சாதனைகள் செய்திடலாம்...
வாழ்வே
சாதனையாய் வாழ்ந்திடலாம்..
சமுத்திரத்தில்
சில துளிதான் - நான்
அறிந்தவற்றைச் சொல்லிவிட்டேன்
அத்தனையும் பருகிவிட
ஆழியாறு சென்றிடுவீர்...
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்...!