உடைந்த வீணையில் முறியாத பூபாளம்

நீ-நான்
நான்-நீ
இது நம் அகராதியில்
இருந்த
நமக்கான புதுவிளக்கம் .

இன்றோ!
நான்-நானுமல்ல
நீ-நீயுமல்ல
நமக்கான விளக்கம் தேடி
நாளும் உருளும்
நதியானது உள்ளம்.

என் உயிர்க்குடிலில்
மின்னல் பாய்ச்சிய
உன் மெல்லிய முத்தம்
இன்றும்
பலநூறு வெண்ணிலவின்
ஒளிசுமந்து கசிகிறது.

நீயோ!
இருட்டுச்சாயத்தை
என் மலே தெளித்து
எங்கோ
மறைந்துவிட்டாய்?

முதல் பார்வையில்
கள்ளைவைத்து
முடிவில்நீ
முள்ளைவைத்தாய்!
கண்ணுக்குள்
அதிரும் வலியால்
உலக உருண்டை
என் தலையில் இருக்கும்
அழுத்தம்.

காதல்மேல்
எனக்கிருந்த காதல்
ஒருபோதும்
கரையவில்லை...
காதலியே நீ என்
கண்ணை குத்தி
விலகியதால்
என்னுள்ளம்
உறையவில்லை...

விலகிச்சென்ற
உன் உள்ளத்தின்
இருக்கம்
எனக்குள் எப்போதும்
படபடக்கும்.

உன்னால்
பூபாளம் இசைத்த
என்
உள்ளவீனை
உடைந்தது!
உடைந்தாலும் பெண்ணே
அது
என்றும் அந்த
பூபாளத்தையே
சுமந்துவாழும்...
ஒருபோதும்
முகாரி பாடாது.

எழுதியவர் : vimal (11-May-12, 2:36 pm)
பார்வை : 430

மேலே