காதலில் விழுந்தேன் அவள் (உன்) மேல் 555

உயிரே.....

அவளை (உன்னை) முதன்முதலில்
பார்த்தபோது...

காதலில் விழுந்தேன்...

அவள்மேல் (உன்மேல்)...

அவளை (உன்னை) காதலி என்பதா...?

கல் தடுக்கி நான் விழவில்லை...

அவள் (உன்) கண்பார்வை
தடுக்கி விழுந்தேன்...

அவளை (உன்னை)
கண்மணி என்பதா...

கண்பார்வையால் என்னை
கட்டி இழுத்தாய்...

அவளை (உன்னை) நான்
காந்த கன்னி என்பதா...

நான் செல்லும் இடமெல்லாம்
நிழலாக வந்து மறைந்தாய்...

அவளை (உன்னை) கானல் நீர்
என்பதா...

உள்ளங்கள் பேசும் வேளையில்
உதடுகளுக்கு என்ன வேலை...

என மௌனமானவள்...

அவளை (உன்னை) என் உள்ளம்
கவர்ந்தவள் என்பதா...

முத்தம் ஒன்று கேட்டேன்...

மழைத்துளிகளுக்கு முத்தம்
கொடுத்தாள்...

அவளை (உன்னை) கார்மேக
தேவதை என்பதா...

இரவினில் பௌர்ணமி நிலவாக
என்னை ரசிக்க வைப்பவள்...

அவளை (உன்னை)
வெண்மதி என்பதா...

நட்சத்திரம் அழகு என்றால்
அவள்...

உன் கண்களை விடவா அழகு...

நட்சதிரவிழி கொண்டவள்
அவள் (நீ) என்பதா...

மின்னல் பார்வையை என்னுள்...

காத்து இடி முழக்கமாய்
என்னுள் பாய்ந்தது...

மின்னல் தேவதை என்பதா
அவளை (உன்னை)...

காதலை எனக்கு காட்டியதால்
காதல் தேவதையா அவள் (நீ)...

என்னை மறந்து செல் என்றாள்...

என் மரண தேவதையா அவள் (நீ)...

என்னவென்று சொல்ல...

எப்படி சொல்ல அவளை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-May-12, 5:02 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 367

மேலே