திக்கற்றவர்கள்

உன் இதயத்தில் பிரவேசிக்கும்
அறிவு ஞானம்.
உன் ஆத்மா இன்பமடையும் போது
நல்ல யோசனை உன்னைக்
காப்பாற்றும்.

உன்னை நல்ல புத்தி
காப்பாற்றும்.

எங்கள் சுதந்திரம்
அன்று
அன்னியர் வசமாக...

எங்கள் வீடுகள் பின்பு
புறத் தேசத்தவர் வசமாக...

இன்று ..
தகப்பன் இல்லை.
சுற்றத்தார் இல்லை...

எங்கள் தாய்களின் கண்ணீர்
விதவை கோலமாக

உதிர்ந்து போன
இலைகளாக
மொட்டை மரமாக
நாங்கள் இன்று ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (13-May-12, 10:56 am)
பார்வை : 257

மேலே