பணம் பத்தும் செய்யும்

நாம் !
நம்மை உயர்த்திக் காட்டுவது
பணம் மட்டும் தானா!
பணம் இல்லாதவனை
மதிக்கப் படமாட்டார்களா.!?

பணம் நம்மை ஆளக் கூடாது.
நாம் அதனை ஆள வேண்டும்.
பணம் இல்லாதவன் பிணம்
என்பார்களே! என்று நீ
புரிந்து கொள்வாய் ?

அன்று !
கடை ஏழு வள்ளல்கள் காலத்தோடு
இருப்பதை இல்லாதோருக்கு
கொடுப்பது போய் விட்டதா.?

இன்று!
அந்த உண்மை மறைந்து விட்டதா!
மறைக்கப் பட்டு விட்டதா!
தான் கஷ்டப்பட்டு உழைத்ததை எதற்கு
கொடுக்க வேண்டும் என்பதாலா?

நீ மட்டும் கடவுளிடம் கேள்?
நீ வெட்கப் படுவாய்!

தன்னை மதிக்க பணம்
மட்டும் போதாது.
கடவுள் உன்னை
மதிக்க வேண்டும்.

நீ செய்யும் நல்ல செயல் கண்டு
உன்னை மதித்து அருள்புரிவான்
கடவுள் நேரிலே...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (13-May-12, 5:09 pm)
Tanglish : panam pathum seiyum
பார்வை : 1126

மேலே