பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள் என்றும்
முடிவதில்லை
வாழ்வெல்லை தொடும் வரை..!
ஐந்து வழிச் சாலையில்
யாரும் நடமாட்டம்
இன்றி வெறிச்சோடிக்
கிடந்தது அமைதிப் பூங்காவாய்...!
இரவில் கூட
இட்லி கடைகள்,டீ கடைகள்
சந்தம் ஏற்றும் வரை....!
வழித் தடம் என்று சென்ற
ஆடு மாடுகளும் இல்லை
கூச்சலற்ற வானமாய்...!
மாட்டு வண்டியில் செல்பவர்களும்
அங்கு இல்லை கூடிக் களிக்க..!
ஆனால்..!
பயணம் எளிதாக சீராக
எந்தத் தடங்கலுமின்றி
விரைவாக வேகமாக
அமைதியான கடலலை போலே..!
இல்லை என்ற நிலையில்
ஐந்து வழிப் பயணத்தில்
எந்த சிக்கலும் இல்லை
என் வாழ்க்கையிலும்தான் ...!