ரயில் பயணங்களில்
திரு விழாவிற்குச் செல்ல
முடிவெடுத்தேன் !
விடுதியிலிருந்து கிளம்ப
தயாராகி விட்டேன்!
என்னுடைய சொந்த ஊருக்கு
செல்வதில் எவ்வளவு
சந்தோசம்.!
கணவரிடம் சொல்லிவிட்டு...
மாமியாரிடம் மாமனாரிடம்
சொல்லிவிட்டு பறந்தேன்
சிறையில் அடைக்கப்பட்ட
கிளிக் கூண்டைப் போலே ...!
நான் பிறந்து வளர்ந்த அழகான
ஊரை நோக்கி தாயைத் தேடும்
மழலை போலே...!
ரயில் வண்டி ஏறி
அப்பப்பா! எவ்வளவு காரியம்
பண்ண வேண்டியிருக்கு
ஒசியிள்ளப் பயணம் போலே...!
பயணத்தின் போது பாதியில்
நின்று போனது நினைவுப் பயணம்
மலரும் நினைவுகளாக !
மறுபடியும் நான் பிறந்த
சொர்க்க உலகத்துக்கே !
சுகமான மவுனச் சிறகுகளாய் பறந்த
நினைவுகளைச் சுமந்துகொண்டு
மிதந்தேன் ரயில் பயணங்களில்.!