யாரென்று தெரியாமல்

வீட்டின் அருகில் வசிப்பவர்
யாரென்று தெரியாது.
நல்லவரா! கெட்டவரா !
எதுவும் தெரியாது.!

கடைக்குச் சென்றால்
யாரும் யாருக்கும்
உதவுவதில்லை ...
மனிதாபமுமில்லை !

வணக்கம் சொல்லி
சிநேகமாக சிரித்தால்...
காசுக்குத்தானே என நினைத்து
காவலாளியை வெறுக்கிறோம்!

ரயில் சந்திப்பில் நண்பர்
ஒருவர் தன திருமண
அழைப்பிதழோடு
தன்னை சந்திக்க
யாரென்றும் தெரியாமல்
தலை குனிய
பெற்றுக் கொண்டு
வழியனுப்புவோம் .!

ஆனால்..

எழுத்து, வலைப்பூ ,face book
இதில் மட்டும் நமக்கு
நூறு நண்பர்களுக்கு மேல்
யாரென்று தெரியாமல்...
நன்றி நண்பர்களே !
வாழ்த்துக்கள் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (16-May-12, 6:17 pm)
பார்வை : 427

மேலே