ஒன்பது ரூபாய் நோட்டும் நாங்களும்ம்

(பேருந்தில் போகும் போது ஒரு இடி மன்னனால் இடிக்கப்பட்ட ஒரு திரு நங்கை சகோதரிக்கு சீட் கொடுக்க மறுத்த பெண்ணை பார்த்த போது இவர்களும் கண்ணகி போல பேருந்தை எரித்தால் என்ற எண்ணத்தால் உதித்த கவிதை )
*மனதால்
நானொரு
பெண் என்பதால்
நீங்கள் என்னை
இடிக்காமல்
விட்டதில்லை.......
*நாங்களும்
மனிதர் தானே
எதோ புதிய
விலங்கு போல
பாரத்தால்
மனம் என்ன
செய்யும் .....
*காமம் ஒன்றும்
எங்கள் பாஷை
அல்ல ....
*எங்களுக்கும்
காதல் வரும்
கனவு வரும்
கடமை வரும்....
* இறக்க பார்வை
காட்டாவிட்டாலும்
எரளனமாக
பார்க்காதீர்.....
*தீப்பெட்டிக்குள்
உறங்கும்
தீக்குச்சிகள்
நாங்கள்
எங்கே
உரசி பாருங்கள்.......
* அணுக்களிக்குள்
உறங்கும்
நியூட்டன் கள்
நாங்கள்
பிளந்து பாருங்கள்....
* அடைத்து வைத்து
இருக்கும்
அணைகெட்டு
தான் நாங்கள்
எங்கே
உடைத்து பாருங்கள்....
* வெடிக்குள்
உறங்கும்
கந்தக துகள்கள்
நாங்கள்
எங்கே
வெடித்து பாருங்கள்......
*அமைதியாக
உறங்கும்
எரிமலை தான்
எங்கே
தொட்டு பாருங்கள்
* எங்களை
ஒன்பதென்று
சொல்லும்
உங்களில்
எத்தனை பேர்
ஒன்பது ரூபாவை
போல
உதவாமல்
போகீறீர்......
தெரியுமா.....
*அரசாங்கமே தாய்
தந்து மடி
சாய்த்து
இருக்கின்றது ....
*தயவு செய்து
கிண்டல் பேசாமல்
மனிதராய்
மதியுங்கள்
மாண்புடன்