தவழுகையில் இருகரங்களையும்

தவழுகையில் இருகரங்களையும் இறுக்கியப்படி
நீண்ட தூரம் ஆயினும் அனைத்த படி
அவ்விரண்டு கரங்கள்
வாழ்வின் பாதி வரை வந்தது.
திடீர் என்று அவ்விரண்டு கரங்களை விலக்கி
வேறு கரம் உன்னை பிடிக்க வாழ்வின்
மீதிக்காக பற்றினாய்.
வந்த கரம் பத்திரமாய் இங்கு இருக்க
வளர்த்த கரத்தை இங்கே ஏந்தவிட்டது ஏன்

தெருவில் அந்த இருக்கரங்கள் ஏந்திய படி
இப்போதும் உன் நினைவில் வாழ்ந்த படி.......

எழுதியவர் : joelson (17-May-12, 8:18 pm)
சேர்த்தது : joelson
பார்வை : 171

மேலே