தீர்வற்ற சங்கடங்கள்...
என் காலில் நசுங்கிய
எறும்பு சுமந்த
ஒரு சீனிக் கோளம்...
அதன் எத்தனை
நண்பர்களுக்கானது ..
என...எனக்கு
அக்கறையில்லை.
மாலையில்...
கவண் எறிகையில்...
துடித்து விழுந்த
பறவையின் கனவுகள்
குறித்தும்.
ஓலமிடும் ஒரு நாயின்
அழுகுரலில்..
ஒளிந்துள்ள வேதனை
குறித்தும்.
என்றாலும்-
இன்று என் கழுத்து நோக்கி..
ஒரு கயிறு நீளும்
கனவு வந்த பின்..
உடைகிறேன்.....
எனது வாழ்வின் தீர்வற்ற
சங்கடங்களால்.