நிரந்தர உலகு
பூவுடல், இறைவனிலிருந்து உருவாக்கம்,
நித்தியம் முடிந்து முடிவினில்
நிரந்தர உறையினில் மறுவாக்கம்.
இடையினில் நினைவலைகளும்,
கனவலைகளும் நிரம்பின மாய,
மனம் மருகும், இந்தப் பயணம்.
ஆழ்கடல் அமைதியினில்
பிறந்து, வான்கடலுலவும்
அலைந்து திரியும் மேகங்கள்,
தேன்மழையைக் கொட்டித்தீர்த்து
நிலமளந்து சேர்ந்துநிற்கும்
நீலத்திரை விரித்த கடல்போல்.
அன்பே உருவாக்கி, கருணையின்
அருகினிலேயே அமைந்திருக்கும்
நிரந்தரமான நிர்வாணா.