அன்பினை அறிவோம்!
நெறிப்படுத்தும் விவகாரம்
ஒருகாலும் சரிப்பட்டு வருவதில்லை.!
அலைகடல்கள் போலும் நெறிகள்
சூழ்ந்ததுதான் இவ்வுலகு
"என்நெறியே சரிஎன்று"
அகத்திலே அன்பினைத் துறந்து
வன்பிலே வாழும் இவ்வுலகம்.
பாழும் வெறுப்பாலே
அன்பை அடையாது
துன்பிலே வீழும் உயிர்கள்.
அன்பு என்பதனை அறிதற்கு
அளப்பரிய அன்பு வேண்டும்.
அரைகுறை அன்பாலே
அன்பினை யாம் அறியமாட்டோம்!
அடுத்தவர் உள்ளமே நமது அன்பின் புகலிடம்.
அதைத் தடுத்தவர் அன்பைக் கெடுத்தவரே.
அன்பைக் கொடுத்தவரும் எடுத்தவரும்
குறைவிலாது நிறைவர்.
நிறைவே அன்பின் பயன்.
அமைதியோ அதன் குணம்.
உள்ளத்து பரப்பெல்லாம்
அன்பாலே நிறைந்து பார்த்தால்
உள்ளமோ அகிலத்திலும் பெரிதாகும்.
அன்போ அதனிலும் விரிதாகும்..
அதுவே நமது சுய சுதந்திரம்.
பரந்த அன்பாலே பரமநிலை அடைவோம்.
பாலு குருசுவாமி.