மௌனம்...!
மௌனம்.....!
இந்த வார்த்தைக்கு பல
அர்த்தங்கள் உள்ளன...
கேள்வி கேட்கப்படும்
நேரத்தில்
-மௌனம் சம்மதம்...!
நாம் நேசித்த சில உறவுகளை
பிரியும் போது
-மௌனம் துன்பம்...!
இடையுறாது காரியம் செய்யும்
விடா முயற்சியின் போது ....
-மௌனம் நம்பிக்கை...!
நம் இதயத்தில் அமர்ந்த
அந்தக் காதலில்
-மௌனம் சித்ரவதை...!
நாம் தோல்வி கண்டு
வெற்றிக்கு வழிதேடும் போது
-மௌனம் பொறுமை...!
நாம் வெற்றி கண்டபோது
நம்மைச் சூழ்ந்திருக்கும்
-மௌனம் அடக்கம்...!
திருமணக்கோலத்தில்
உள்ள அமைதி-ன் போது
-மௌனம் வெட்கம்...!
தவறுதலாக தவறு
செய்த போது...
-மௌனம் பயம்...!
ஆசைகள் நம்மை
சூழ்ந்திருக்கும் போது...
-மௌனம் எதிர்பார்ப்பு..
கோபத்தை குறைக்காமல்
அடக்கும் போது...
-மௌனம் ரத்தக்கொதிப்பு...!
இலக்கை அடைய நினைத்து
ஒருமுகப்படுத்தும் போது
-மௌனம் சக்தி...!
தீவிரமாகப் போராடும் போது
-மௌனம் வலிமை..!
பிடிக்காத விஷயங்களை
ஒத்துக்கொள்ளாத போது
-மௌனம் எதிர்ப்பு...!
கல்யாணவீட்டினில்
கால் இடறி விழுந்தபின் எழுந்து
அமர்ந்திருக்கும் போது
-மௌனம் அவமானம்...!
நம்மை விட்டு பிரிந்தவர்களை
பாசத்தோடு நினைக்கும் போது
-மௌனம் துக்கம்...!
நம் குடி கெடுத்தவர்களை
பழிவாங்க நினைக்கும் போது
-மௌனம் ஆத்திரம்...!
கற்ற வித்தையை கையாளும் போது
-மௌனம் ஆனந்தம்...!
இந்திரியம் அடக்கி மூலாதாரக் கனல்
எழுப்பி ஆக்ஞை-ல் வைக்கும் போது
-மௌனம் பேரானந்தம்...!
அயர்ந்த வேளையில்
அமைதியான அந்த
-மௌனம் உறக்கம்....!
உறக்கம் என்று அனைவரும்
நினைத்திருக்க...
உடலோ அசையாமல்
அயர்ந்திருக்க...
அண்டை அயலார்
சூழ்த்திருக்க...
-மௌனம் மரணம்...!