விடுகதைகள் - ரிலாக்ஸ்சா கொஞ்ச நேரம்!!!
![](https://eluthu.com/images/loading.gif)
எப்போதும் பரபரப்பா போகுற நம்ம வாழ்க்கைல ரிலாக்ஸ்சா கொஞ்ச நேரம் ஒதுக்குங்க.. அப்போ தான் mind கொஞ்சம் பிரெஷ் ஆகும் தோழர்களே.. உங்களுக்காக இதோ சுவாரசியமான விடுகதைகள்..இந்த விடுகதைகள நீங்க கண்டுபுடிங்க? ஓகே... ஸ்டார்ட் தி கேம்!
1) பிறக்கும் போது வால் உண்டு; இறக்கும் போது
வால் இல்லை. – அது என்ன?
2)பச்சை கதவு, வெள்ளை ஜன்னல், திறந்தால்
கருப்பு ராஜா – அது என்ன?
3)ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே குடுமிதான் ! – இது என்ன?
4)ஒருவரை ஒருவர் இவர்கள் அடித்துக் கொள்வார்கள்,ஆனாலும் தகராறே கிடையாது, அவ்வளவு நெருங்கியவர்கள் – இவர்கள் யார்?
5) காற்றால் உயிர் பெறும், காதுக்கு இனிமை தரும்
- அது என்ன?
6)பகலில் உறங்குவான், இரவில் அலறுவான்
-அவன் யார்?
7)தண்ணீரில்லாத பொட்டலிலே தாவிச் செல்லும் கப்பல் எது?
8. அரைச்சாண் ராணி; அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள். அது என்ன?
9. ஆனை விரும்பும், சேனை விரும்பும்; அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். அது என்ன?
10. ஊரெல்லாம் வம்பளப்பான்; ஓர் அறையில் அடங்குவான். அவன் யார்?
நல்லா யோசித்து பதில் கொடுங்க தோழர்களே!!!