எரிந்த சூரியன்.
நேற்றின் தொடர்ச்சியற்று...
மௌனமாய் வலம்வரத் துவங்குகிறது...
சூரியனின் முதல் கதிர்.
எந்த நோக்கமுமற்று...
துரத்துகிறது எல்லா மனிதர்களையும்..
அவரவர் திசையில்.
துரத்திலினூடே...
நிகழ்ந்துவிடுகிறது சில காயங்கள்.
வலியைச் சொல்ல வாயற்று...
பெருகும் சிவப்போடு....
மலையிடுக்கில் விழுகிறது...
அந்திக்காலங்களில்...
எரிந்த சூரியன்.