காத்திருந்த காதல்

உச்சி வெயில்
நடு மண்டையை
நச் சென்று பிளக்குது

எனினும்
எனக்கு
ஏசியில் இருப்பதாய்.......

ஏனெனில்
காதலிக்காக இப்போது
காத்திருக்கிறேன் நான்......

ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்றாள்...
ஐந்து மணி நேரமாகியும் வரவில்லை

காத்திருக்கிறேன்......

நிழலில் படுத்துக் கிடந்த
தெருநாய் என்னை
பரிதாபமாகப் பார்த்தது.........

ஒ.....அதோ வருகிறாள்......
கூட ஸ்கூட்டரில் யாரு ? குழம்பினேன்

இவர்தான் நான் கல்யாணம் செய்யப் போறவர்

என்று

என்னிடம் அறிமுகம் செய்து வைத்தாள்....

நிழலில் படுத்துக் கிடந்த
தெருநாய் என்னை
பரிதாபமாகப் பார்த்தது.........

எழுதியவர் : (21-May-12, 10:22 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 342

மேலே