மரத்தின் மரண சாசனம்

விதையாய் விதைத்து ,
கன்றாய் துளிர்த்து ,
பருவம் தரித்த
மரத்து மங்கையானேன் !

மலர்ந்தேன் ,
காய்த்தேன் ,
கனிந்தேன் ,
நீ ருசிப்பதர்க்காக அல்லவா
நான் படைக்கப்பட்டேன் !

நான் உனக்கு என்ன கொடுக்கவில்லை ,
இலைகலையா ,
கிளைகலையா ,
காய்கலையா ,
இல்லை கனிகலையா ,
உன்னாக்ககவே வாழ்கிறேன் !

நீ கொடுத்த நீருக்கு
கனிகளை கொடுத்து கடன் தீர்த்திருக்கிறேன் ,
உயிர் கொடுத்த நிலத்திற்கும் உனக்கும் ,
நிழல் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினேன் ,
கடமையையும் நன்றியையும்
காலம் தாழ்த்தாமல் செய்துவிட்டேன் !

நன்றியை மறந்த மனிதா
உனக்கு மூச்சு கொடுத்த என்னை
மூச்சடக்க பார்க்கிறாய் ,
வேண்டாம் இந்த விபரீதம் ,
நாங்கள் வாழ்ந்தால்தான் பூமி சோலைவனம் ,
நாங்கள் இல்லையேல் பூமி பாலைவனம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (24-May-12, 2:44 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 177

மேலே