காதலர் நாள்!
பூங்கொத்து கொடுப்பதற்கும்
புதுவாழ்த்து சொல்வதற்கும்,
ஓங்கு புகழ் தமிழெடுத்து,
உயர்வாக காட்டுதற்கும்,
ஏங்குமிரு உள்ளங்கள்
இயல்பாக இணைவதற்கும்,
வாங்கிவந்த வரமாக
வந்ததிந்த காதலர் நாள் !
அன்புடைய நெஞ்சங்கள்
அகமகிழ்ந்து தழுவிநின்று
செம்புல பெயல் நீராய்
செழித்தென்றும் வாழட்டுமே!