உன்னால் முடியும்..!
சிலுவைகளைத் தொலைத்து,
சிறகுகளைத் தந்த மகாத்மாவே!
கோவிலுக்குள் வணங்க
தேசத்தை வணங்க கற்பது எப்போது?
காற்றும்..
கடலும்... பூத்து குலுங்கும் புது மலரும்
சுதந்திரத்தை சொல்லித் தருகிறது..!
நாம்..
இலவசங்களும்...
எதிர்பார்ப்புகளும்...
இன்னுமொரு
அரசியல் அடிமைத்தனத்தை விதைக்கிறது..
ஒரு பொறி நெருப்பில்..
ஓரா ஆயிரம் தீபங்கள் !
நூறுகோடி இந்தியனே !
உன்னால் முடியும்
உலக அரங்கில்..
ஒயர்ந்த இடத்தில்
நாமும் இருக்க!