எனக்காக அத்தனையும் சுமந்து......
இது வரை என் பாதம்
மண்ணை தொட்டதே இல்லை......
என் கண்கள்
கண்ணீரை அனுபவித்தே இல்லை.....
என் கைகள்
ஒரு போதும்
வேலை என்பதை அறிந்ததே இல்லை.....
ஏன் என்றால்
எனக்காக அத்தனை
சுமையையும் சுமந்தது
நீ தானே?
என் அன்பின் அன்னையே?
மாவடு போட்டு
கஞ்சி சாதமாக இருந்தாலும்
அறுசுவை உணவாக இருந்தாலும்,
அத்தனையும்
எனக்காக பார்த்து பார்த்து
நீ செய்யும் பாங்குதான் என்ன?
இப்படியெல்லாம் என்னை சீராட்டும் நீ
எப்போது போவாயோ
அப்போது என்னையும் கூட்டி போய் விடு
இந்த சீர் கெட்ட உலகில்
என்னை கஷ்டப்பட விட்டு விடாதே......