கனவுக்காதலானே

கண்ணாளனே என் உயிர்க்
காதலனே!
காலம் காலமாகிக்
கொண்டிருக்கிறது
இனியும் நான்
காத்திருக்க விரும்பவில்லை.

கண் இமைக்காமல்
பார்த்திருப்பேன்,
உன்னைக் காதலிக்கவே
பூத்திருப்பேன்.....

கண்ணா நீ வருவாயா ....
காதல் வாசம் தருவாயா....

கள்ளமில்லா உன் உள்ளம்
களங்கமற்ற உன் விழிகள்
களிப்புறச் செய்யும் உன் புன்னகை
கண்டங்களை தகர்க்கும் உன் வீரம்
இவற்றையெல்லாம் காண
காத்திருக்கிறேன்.

தென்றல் உன் வாசம் தருமாட
தேனிசை கீதமும் இசைக்குமடா

சுயநலமில்லா உன்னைக் காண
தவிக்கிறேன்....
காலமெல்லாம் உன்னுடன் வாழ
விரும்புகிறேன்....

தோழமையோடு
பேசிடும் தோழா...
உன் தோற்றம்
காண விரும்புகிறேன்.

கண்ணா நீ வருவாயா,
கன்னியின் மனதில்
காவியம் படைக்க.

தொலைவினில் இருந்தாலும்
வந்திடு....
தொலைந்து கொண்டிருக்கும்
என் மனதை தந்திடு....

எழுதியவர் : harinikarthi (25-May-12, 7:56 pm)
சேர்த்தது : harinikarthi
பார்வை : 162

மேலே