மயங்கின மலர்

புதிய மஞ்சளாடையில் புதிய காலை,
அதில் புத்தம்புதிதாய் ஆதவன்,

புதிய ஒளிக்கதிரினுள் ஒளிந்துகொண்டு
ஓடித்திரிந்த உயிருள்ள புதிய தென்றல்,

தென்றலின் ஸ்பரிச உரசலில்
புத்துயிராய் மலர்ந்த புது மலர்.

தேனுண்ட வண்டு மயங்கக்
கண்டோம் இவ்வன உலகத்தில்,

வண்டுண்ட தேனால் மலர் மயங்கக் கண்டதென்னவோ இந்நிலவொளியில்தான்.

எழுதியவர் : thee (27-May-12, 2:13 pm)
பார்வை : 186

மேலே