வெளிச்சம் தேடிய நாளில்...

ஆதியில்...
நிர்வாணமாய் இருந்தது...
எல்லாமும்.

"அந்தரங்கம்"..
"மறைத்தல்" ....குறித்தான..
வினாக்களில் முளைத்தது
"நாகரீகம்".

குகைகளின்...
இருளைத் தாண்டி...
வெளிச்சம் தேடிய நாளில்..
முளைத்தது வீடுகள்.
பின்னர் விளக்குகளும்.

மொழி முளைத்த நாளில்...
விழிகளைத் தாண்டி வளர்ந்தது
"காதல்".

வளர்ந்த நாகரீகத்தில்...
காடுகள் வீடுகளாகி விட..
வாழ்க்கை சுருங்கி விட்டது
சில ஓடுகளுக்குள்.

இயற்கையை...
மனிதன் "இடப் பெயர்ச்சி" செய்ததில்...

யுகங்களாகி விட்டது..
மனிதன் "இயல்பாய்" இருந்து.

எழுதியவர் : rameshalam (27-May-12, 2:15 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 145

மேலே