இன்று நீயிருந்தால் அவ்வையே ..3
நாளும் நல்லது சொன்ன
நற்கவி அவ்வையே!
இன்று நீயிருந்தால்
இவர்களைப்பற்றி
எழுதுவதென்ன?
அறிவையும் பண்பாட்டையும்
அறவே புறந்தள்ளி
வெளிநாட்டில் வேலையென்று
மருத்துவம் பொறியியல் படிக்கும்
மாந்தரிடம் சொல்வதோ
‘எண் எழுத்து இகழேல்’ என்றா?
தேர்தல் வந்து விட்டால்
தேவைகள் தீர்ந்துவிடும்
அடுத்த இடைத்தேர்தலை
ஆவலுடன் எதிர்நோக்கும்
சுயமரியாதையிழந்த
மக்களிடம் சொல்வதோ
‘ஏற்பது இகழ்ச்சி’ என்றா?
இருப்பவனோ கொடுப்பதில்லை
இல்லாதவானோ நினைத்தாலும்
இருப்பதில்லை கொடுப்பதர்க்கு
யாரிடம் போய் சொல்வதோ
‘ஐயம் இட்டு உண்’ என்று?
............................(தொடரும்)