பதிவுகள் !

அன்னையின் பதிவுகள்
அன்பு!
அன்பின் பதிவுகள்
நட்பு!
நட்பின் பதிவுகள்
உரிமை!
மொழியின் பதிவுகள்
எழுத்து!
எழுத்தின் பதிவுகள்
இலக்கியம்!
மனத்தின் பதிவுகள்
வெளிப்படும் குணம்!
விண்ணின் பதிவுகள்
மேகம்!
மேகத்தின் பதிவுகள்
மழை!
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை பதிந்திடும் போது
மனிதா..
நீ எதை பதிந்திட போகிறாய்?
ஒன்றாய் கூடி கைகளை உயர்த்து...
சாதியை ஒழித்து சண்டையை நிறுத்து..
மனிதம் ஒன்றை மன்றத்தில் வை!
மகிழ்ச்சி எங்கும் பூக்கச் செய் !

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (28-May-12, 9:30 pm)
பார்வை : 213

மேலே