உன் கள்ளக்காதலுக்கு....

வரண்டுகிடக்கும்
என் வாழ்க்கையை
எட்டிப்பார்...
அன்பே!பணமே!
அக்கணமே
அது மாறிவிடும்
சோலை வனமாய்!

அன்பே!பணமே!
நீ
உழைப்பவர்களை
ஒதுக்கிவிட்டு
ஏய்ப்பவர் கைகளில்
மயங்கி கிடக்கும்
மர்மம என்ன?

அன்பே!பணமே!
நீ
இல்லாதவரை விட்டு
இருப்போரிடமே...
பதுக்குவோரிடமே
பதுங்கி கிடக்கும்
மர்மம என்ன?

அன்பே!பணமே!
இது
பொருளாதார
விபச்சாரமல்லவா?
உன் கள்ளக்காதலுக்கு
அளவே இல்லையா?

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (28-May-12, 9:39 pm)
பார்வை : 247

மேலே