ஆசை...?
நானும் ஆசைபடுகிறேன்..!
அடையத்தான் வழியில்லை..?
வானத்தில், கானம்பாட ஆசை..!
வல்லாரை கீரைதின்ன ஆசை..!
மேகத்தில், தேகம் பட ஆசை..!
வேதத்தை தாகம் தீர்க்க ஆசை..!
நிலாவில், உலாவ ஆசை..!
உலாவி, "கலவா" ஆசை..!
விண்மீனில் படுத்துறங்காசை..!
பொட்டு வைத்து, நட்டுவிட ஆசை..!
அம்மாவின் கர்ப்பத்தில் உம்மாகொட்ட ஆசை..
நண்பர்கள் அரவணைப்பில் நான்னிருக்காசை..!
இறைவனின் சன்னதிக்குள் இசைபயில ஆசை..!
இராமலிங்கடிகளின் "வரி"திங்காசை..!
நீருக்குள் நானமர்ந்து ஞானம்பெற ஆசை..!
வேருக்குள் நான்புகுந்து பூத்துவிட ஆசை..!
வெண்தாமரை பூவாய் வீற்றிருக்க ஆசை..!
வண்டுவந்து அமர்வாய் முத்தமிட ஆசை..!
பொதி சுமக்கும் கழுதையாய்,
பயணம் கொள்ள ஆசை..!
உலகின் சுமையை நான் தாங்க ஆசை..!
ஏழைப்பாதத்தில் கீழமர்ந்து தூக்கிவிட ஆசை..!
ஃபில்(feel) வாழும் வாழ்க்கையை போக்கிவிட ஆசை..!
பாலைவன பாம்பின் விஷமாக ஆசை..!
ஏமாத்தும் எதிரிகளை கொத்திதீர்க்காசை..!
பயத்தை பந்தி வைத்து பகிர்ந்துண்ணாசை..!
வீரத்தை நூல் கொண்டு "சாரம்" கட்ட ஆசை..!
ஆசை.. ஆசை பேராசை...?
பே - பேய்த்தாக்கினிலைகுலைந்து,
ரா - இராப்பிச்சை படியேறி..!
சை - சைத்தானின் சன்னலுக்குள்
இன்னல்பட ஆசையா..?
வேண்டாம்..!
இந்த வாசகத்தின் வரைமுறை,
அறியப்படாத ஆசை அண்டத்தின்மேல்,
எத்தி உதைத்த வாழ்க்கை இன்று
வாசகத்தை ஏத்தி இறக்கியது..!
ஆசைபடுங்கள்..! வானத்தில்
எறிபடும் பந்து எவ்வளவு
தூரம் போகிறதோ..
அவ்வள அளவுக்கு..!
அதுதான் எல்லையின்..?
வெற்றி இலக்கு ...!
எனச்சொல்லி......!
என்ன செய்ய..
நானும் ஆசைதான்படுகிறேன்..!
அடையத்தான் வழியில்லை..?
எல்லொருக்கும் ஆசை..!
எண்ணில் அடங்கா....?
எவ்வாசை நிறைவேற.
இவனின் கவி பாஷை..!
மதுரை கருப்புவாசகம்..
அரபு தேசத்திலிருந்து..!