தங்கைக்காக ...!
![](https://eluthu.com/images/loading.gif)
நிலவின் நகலாய் ..நிலவுலகில் பிறந்தவளே ..!
அன்புத்தங்கையாய் என்நெஞ்சில் ஒளிரிந்தவளே ..!
மண் மீது மங்கை உருவெடுத்து பிறந்தவளே ....
கங்கை வடிவெடுத்து தவழ்ந்தவளே ...!
என் செல்லக்குட்டியே...வெல்லக்கட்டியே...
மங்காத ஒளி படைத்த தங்க கட்டியே ....!!!!
என் இதய வானில் நீ வளர் பிறை ...
உன்னிடம் நான் இதுவரை
கண்டதில்லை சிறுகுறை.....!
பொன்னகையின் உறைவிடம் பொக்கிஷ அறை...
உன் புன்னகையின் புகலிடம் ...என் இதய அறை ..!
நீலவானத்து விண்மீன்களை
விடிய விடிய எண்ணியிருக்கிறேன் ...
களிப்புதீர அதில் உன் புன்னகைகளை ..
இடையிடையே வைத்து பின்னிஇருக்கிறேன்..!
அகராதியை புரட்டி பார்த்தேன் ..அதில்
அமைதிக்கு அருகில் உன் பெயர் ...!
மௌனமாய் இருப்பாய் ...மோகனமாய் சிரிப்பாய் ..
அமுதமாய் இனிப்பாய் ...பொய்யாய் அழுவாய் ...!
செல்லமாய் சிணுங்குவாய் ...
மறுஜென்மம் பிறப்பெனினும்...
நீயே எனக்கு பிறப்பாய் ..!!!