(ரூபாய்)"என்னையும் இ ப்படி புலம்ப விட்டார்களே "

என்னிடத்தில் பிறக்கிறார்கள்,
என்னிடத்தில் வாழ்கிறார்கள்,
என்னிடத்திலேயே இறந்தும் விடுகிறார்கள் ...

அனைவரும் என்னை மட்டும் நேசிக்கிறார்கள்...
நான் இல்லாத இடமெங்கும் துக்கமும்,துயரமும்,
எல்லாவற்றிக்கும் நான் தேவைப் படுகிறேனாம்...

நான் ஒருவனிடதிலிருப்பதும் இல்லை,
தெரிந்தும் என்னை யாரும் விடுவதும் இல்லை...

"என்னால்"எவ்வளவு இருந்தும்,கொடுக்க இயலாத மனதை மாற்றிய எண்ணம்

என்னை பார்த்த பின்பு கடவுளையும்,
கல் என்று சொல்லும் மானுடர்...

இவன் படைத்ததிலேயே
இழிவான படைப்பு நானோ......

இருட்டறையில் வாழ்பவரை,வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று எண்ணிய என்னை
இப்படி,
இருட்டு அறையில் பூட்டி வைத்து விட்டார்களே.......

'என்ன வாழ்க்கடா இது'
என்று
பேங்க் லாக்கர் -ல் இருந்து புலம்பிய "ரூபாய்"....

எழுதியவர் : Dhanu (30-May-12, 10:37 am)
சேர்த்தது : dhanubp
பார்வை : 246

மேலே