சமுதாயத்திற்கு ஒரு கேள்வி...
பெண்கள்...
நிமிர்ந்து நடந்தால்..
யாரையோ பார்க்கிறாள்!
குனிந்து நடந்தால்..
எதையோ நினைக்கிறாள்!
சிரித்து பேசினால்..
அவனோடு "எதோ" அவளுக்கு!
சிரிக்காமல் பேசினால்..
துக்கை (விதவைக்கு சமானம்)....
தன் விருப்பத்தை சொன்னால்..
மோசமானவள்!
சொல்லாமல் கண்ணீரை ஏற்று கொண்டால்..
சீதை...!
கூட்டத்தில் பேசினால் வாயடி
பேசாவிட்டால் ஊமை!!!
நான் சமுதாயத்திடம் கேட்கிறேன்..
பெண் என்பவளும் மனிதமா இல்லை மரமா...?!