சூரியனும் உன்னை சுற்றி வரும் ..!
நண்பனே ...
உன் வேதனையை வெளிக்காட்டாதே ...அவை
உன் சாதனைகளை மறைத்துவிடும் ...!
கவலைகளை உன் கண்களில் காட்டாதே ...
அது கண்ணீரில் உன்னை கரைத்துவிடும் ..!
துயரத்தில் மூழ்கிவிடாதே....அது
உன் வாழ்கையை மரித்துவிடும் ...!
சோதனைகளை கண்டு சோர்ந்து விடாதே ..
அது வெற்றியின் அடிச்சுவடுகள் ....!
தோல்வியில் துவண்டு விடாதே ...
அது உன் முயற்சியை விழுங்கிவிடும் ..!
உன்னை நீ உறுதியாக நம்பு ...
உன்னுள் உத்வேகம் பிறக்கும் ...
உன் வாழ்வில் எல்லாமே சிறக்கும் ..!
நம்பிக்கை வை ...நட்சத்திரமும்
உன் அருகில் வரும் ....!
முடியாதெனினும் முயற்சி செய் ...
சூரியனும் உன்னை சுற்றி வரும் ..!
சிரிக்க தெரிந்தவன் எல்லாம் மனிதன் இல்லை ..
அழுகையை அடக்கி சிரிக்க தெரிந்தவனே ...
இந்த மண்ணில் மாமனிதன் ...!
உன்னை சுற்றி சுழலும் உலகம் ...
உன் கையில் சுழலும் காலம் வரும் ...!
அதுவரை அயராதே ..அஞ்சாதே ..
நெஞ்சத்தில் வலு இருக்கும்வரை
நீ விழவே மாட்டாய் ..!
அகத்தில் இது இருக்கும் வரை ...
நீ அழவும் மாட்டாய் ...!
அஸ்தமனம் பூமிக்குத்தான் ..
சூரியனுக்கு இல்லை ...
அஸ்தமனமும் நிரந்தரமில்லை ...
விடிந்து விடும் ..விடியலில்
நீ சூரியன் ...!