உறக்கங்கள் கலையும் ...!

ரத்தங்கள் சிந்தாமல் யுத்தங்கள் ஓயாது ..!
உண்மைகள் உறங்கினாலும் ...
ஒருநாளும் உயிரோடு புதையாது..!
முகமுடிகள் ஒருநாள் கிழியும்...அப்பொழுது
முகங்கள் தன்னாலே அழும் ...!?
முடிவுரைகள் வரும் ....அப்பொழுது
எந்த புத்தகமும் விமர்சனம் பெறும்...!?
சுயநலத்தில் முளைத்த இரவை ...
உண்மைச்சூரியன் சுட்டெரிப்பான் ...அப்பொழுது
விடியலின் ஒளியில் ...
வாழ்கையின் நம்பிக்கைகள் ...புத்துயிர் பெறும் ..!
குப்பை மேடு கோபுரமாகிவிட்டால்...
கோமாளி வேஷம் கூட பொருத்தம்தான் ...!
கோபுரம் குப்பைமேடாகிப்போனால்
குபேர வேஷம் கூட வேதனைதான் ...!
உறவுகளுக்காக உண்மைகள் ...வெகுகாலம்
வேஷங்கள் போட முடியாது ...
தன்னலத்திற்காக......
பொதுவுடைமை பலியிடப்படுவதை ....
பார்வைகள் பொசுக்காமல் விடாது ...!
சுயநலப்போக்கு ....
சமூக உறவை ...சுத்தமாய் துண்டித்துவிடும் ..
இந்த சத்தியவாக்கு ...
சுதந்திரமாய் சுயநலத்தை ..
அப்பொழுது தண்டித்துவிடும் ..!
உண்மைகளின் உறக்கங்கள் ...
ஒருநாள் கலையும்...அப்பொழுது
யுத்தக்களத்தில் ...பொதுவுடைமை ..
சுயநல உயிரைக்குடித்து பிறக்கும் ...!?

எழுதியவர் : இரா.அருண்குமார் (30-May-12, 2:16 pm)
சேர்த்தது : R.Arun Kumar
பார்வை : 210

மேலே