ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
திரவத்தங்கம் திடத்தங்கம்
விலை உயர உயர
ஏழைகளுக்கு துன்பம் !
பிறக்கையில் முகம் சுளித்தவர்கள்
சாதித்தும் அகம் குளிர்ந்தார்கள்
பெண் குழந்தை !
கூட்டணிவைத்து கோடிகள்அடித்து
கடைசியாக அறிவித்தனர்
கசப்பான கூட்டணி !
கோயில் கருவறை
அனுமதி இல்லை
தமிழ் தமிழன் !
உயர் நீதி மன்றத்தில்
தொடரும் தீண்டாமை
தமிழ் மொழிக்கு !
உதட்டிலும் உள்ளத்திலும்
இல்லை தமிழ்
தமிழன் ?
பாதுகாக்க முடியவில்லை
வேண்டவே வேண்டாம்
புதிய சிலை !
மரியாதைக்கு நிறுவியது
அவமதிக்க காரணியானது
சிலை !
சாலையில் படுத்திருந்தான்
சங்கடமின்றி
குடிகாரன் !
குடியால் கோடிகள் அரசுக்கு
குடும்பம் தெருக்கோடிக்கு
திருந்தாத குடிமகன்கள் !
உதவுவதாக நினைத்து
துன்புறுத்துகின்றனர்
மாட்டுக்கு லாடம் ! (இரும்புக் காலணி)
இறந்த வீட்டில் எல்லோரும்
கேட்கும் கேள்வி
காப்பீடு எவ்வளவு ?
தவிர்க்கலாம் இட நெருக்கடி
புதைப்பதை விட
எரிப்பதே நலம் !
அளவான குடும்பம்
அளவற்ற இன்பம்
குடும்பக்கட்டுப்பாடு !
கருப்பணம் வெள்ளையானது
கோயில் கணக்கில்
உண்டியல் வசூல் !
கவனம் கவனம்
சாமியாரில் ஆசாமிகளில்
யாரும் இல்லை சாமி !
பறிக்கப் பறிக்கத் துளிர்க்கும்
அட்சயப் பாத்திரம்
தேயிலைச்செடி !