வளர்ந்து கொண்டே இருக்கும் சிலுவை.
ஆதியின் முதல் மனிதனோடு...
முளைத்திருக்கும்...
அவன் சுமக்க வேண்டிய சிலுவையும்.
உதற இயலாத அவனின் சிலுவைகள் ...
வளர்ந்து கொண்டே இருக்க
அவன் தோள் மாற்றினான் அதை....
சில அவதாரங்களின் மேல்.
ஆதி சங்கரர்...
இயேசு....
புத்தர்...
என ஒவ்வொரு தோளாய் ஏறி அமர்ந்த அது..
சென்ற நூற்றாண்டில் உட்கார்ந்து கொண்டது..
காந்தியின் மேலும்...
தெரசாவின் மேலும்.
இன்றும்...அவர்களின் கல்லறைகளில்....
அவர்கள் மேல் தொற்றிக்கொண்டிருக்கும் ....
அச் சிலுவை..
இடம் மாற...
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமென...
வலியுடன் கணக்கிடுகிறேன் நான்.