மரணம் மென்மையானதுதான்....!...?

மரணத்தைவிடக் கனமானது
உன் மௌனம் ,

தெரிந்தும்
விதைக்கிறாய்..

பறவைகளின் சத்தத்தில்
விடியலை ரசிக்கின்றேன்!
தொலைவில் கேட்கும்
ஒளியைக் கொண்டு
வரப் போகும் ரயிலை அறிகிறேன்!

வானம் இடித்து போடும் சத்தம் கொண்டு
கொட்டப் போகும் மழையை புரிந்துகொளிகிறேன்!

குற்றாலத்தில் வற்றி உலர்ந்த
பாறைகளிலும்
"ஒ" வென்ற பேரிரைச்சலுடன்
கொடுகிறது நீர் இப்போது,

பூமி சுழன்று கொண்டிருப்பதால்
கால மாறுதல்கள்
கண்முன் விரிந்துகொண்டிருக்கிறது!
ஒலிகள்..
உயுர்ப்புகளை சொல்கிறது!

உன் மௌனம்...?

இன்னும் தவமிருக்கிறேன்.....
என்றோ நீ சொல்லிருக்க வேண்டிய
அந்த சொல்லுக்காக! இன்று வரை !

பரவாஇல்லை....
ஆம்...
இல்லை....
எதில் எதை வேண்டுமானாலும் சொல்...
சத்தமாக!

வலித்தாலும்,
தாங்கிக் கொள்வேன்...
உன் மௌனத்தைவிட...
மரணம் மென்மையானதுதான்....!...?

எழுதியவர் : ந. ஜெயபாலன்,திருநெல்வேலி ந (1-Jun-12, 11:25 am)
பார்வை : 149

மேலே