அவள் வந்துவிட்டாள்

ஏணியில்
கிட்டக் கிட்டப் படிகள்
அவள் வார்த்தைகள்
ஏற்றமொடு
ஒளிபொருந்தி
கண்கள்
புண்படும் போது
அவள் புன்னகை
ஆற்ற வரும்
கண்படக் கூடாது
அதனால்
கோபித்தும்கொள்வாள்
நானே தான்
என்பாள்
நாணிக்குனிந்து
பக்குவங்கள்
அவள் மனதில்
பாணின் விலை.
அள்ள அள்ள
நிறையூம்
தேன் குடம்
வரம் தர
இறைவன் - என்
வாசல் வருவதில்லை
அவள் வந்துவிட்டாள்