'அவனை மறப்பதற்க்கோ''

அவனால்,

கல்லென்றுத் தெரிந்தும் கடித்தேனே
சுவைப்பதற்க்கோ...
கனவென்றுத் தெரிந்தும் ரசித்தேனே
ஏமாறுவதற்க்கோ...

முள்ளென்றுத் தெரிந்தும் முத்தமிட்டேனே
சுகத்திற்க்கோ...
மலரென்றுத் தெரிந்தும் மணக்க மறுத்தேனே
வெறுப்பதற்க்கோ..

காற்றென்றுத் தெரிதும் கட்டி இழுத்தேனே
அனைப்பதற்க்கோ...
கடலென்றுத் தெரிந்தும் கடந்தேனே
நடப்பதற்க்கோ...

"தீ"என்றுத் தெரிந்தும் அனைத்தேனே
விளையாடுவதற்க்கோ...
தீமை என்றுத் தெரிந்தும் செய்தேனே
நன்மைக்கோ...

இசைக்காதென்றுத் தெரிந்தும் இசைத்தேனே
பாடுவதற்க்கோ...
முடியாதென்றுத் தெரிந்தும் முயற்சித்தேனே
பழகுவதற்க்கோ...

அனைத்தையும் அவனிடத்தில் கொடுத்தேனே
இப்படி புலம்புவதற்க்கோ...
இப்பொழுது,
வெறுத்தேனே அவனை மறப்பதற்க்கோ...


-(தானு)

எழுதியவர் : Dhanu (4-Jun-12, 12:56 am)
பார்வை : 336

மேலே