நிலவொளியில் அவன்

சுற்றிருந்த ஆயிரம் மரங்கள்,
ஒற்றை வழிப் பாதை,
நிலவொளியின் நிழலில் இரு பிம்பங்களாய்
தனித்தனியே தனிமையில் நானும், அவனும் ...

நிலவொளியை ரசித்துக் கொண்டிருந்தான்,
நான் நிலாவொளிப் பட்ட அவன் முகத்தை ரசித்துக் கொண்டிருந்தானே...

ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்த அவன் உதடுகள்,நான் கண்டதோ
அவன் கண்களில் தெரிந்த இமையையும்,நிலவையும் ...

சொல்லிடாத காதல்,
சொல்லத் துடிக்கும் மனம்

இறுதிவரை என் காதலைச் சொல்லாமல் நானும்,மறைந்த போன மனமும்,நிலவும்...

எழுதியவர் : Dhanu (4-Jun-12, 12:04 am)
சேர்த்தது : dhanubp
பார்வை : 293

மேலே