நம் நட்பு தொடர்ந்திருக்கும் .......

நினைவுகளை அசைபோடுகையில்
சுவையாக நட்பிருக்கும்
நரை திரை விழுந்த பின்னும்
நம் நட்பு தொடர்ந்திருக்கும்
கூன் விழுந்து நடந்திருப்பேன்
கூடவே உன் நினைவு வரும்
என் நிழலாய் நீ இருப்பாய்
உனக்குச் சுடும் என்றே
என் முதுகு கதிர் எதிர்க்கும்......!
செவி சக்தி போன பின்னும் நின்
செந்தூர கவி மொழி மனம் கேட்கும்
விழி சக்தி போன பின்னும்
விரும்புகின்ற உன் உருவம் தெரியும்
இறுதி மூச்சை இழுத்திருப்பேன்.....
இன்னும் கொஞ்ச நேரம்
உயிரோடு நீ இரு என
உத்தமியே நீ பிடித்திருப்பாய்.....!
நீ விட்டு விட்டால் உயிர் விடுவேன்
நீடுழி நீ வாழ்க பெண்ணே....!
நானும் வாழ்வேன்......!
நகைத்துக் கொள் கொஞ்சம் - என் மனசில்
நறுமலர்கள் பூக்கட்டும்

========================================================

குறிப்பு :

கவிதைத் தோழி ஒருவருக்கு - நான்
களிப்புடனே நட்பு மடல் வரைந்தேன்
கலை நய ரசனை கொண்டே - அதை
காட்டச் சொன்னார் எழுத்து உலகத்துக்கு..!
கட்டுப் பட்டேன் அவர் கட்டளைக்கு..!
காட்டியிருக்கிறேன் எங்கள் நட்பை - உங்கள்
கண்கள் ரெண்டும் இதைப் படிக்கும் போது..
கருத்தில் ஒருமித்திருக்குமே எங்கள் நட்பு ?!
கவிதை சிந்தனைகள் ஒன்று படும்- அது
காலச் சக்கரத்தை வென்று விடும்
காற்றை எங்கள் நட்பு கட்டிப் போடும் - எனவே
கைகள் கோர்த்திடுங்கள் எங்களோடு....ப
கைகள் போகட்டும் தோள் கொடுப்போம்
கனிவாய் அழைக்கின்றோம் நட்போடு
கவிதை நட்பாய் கலந்திருப்போம்.....!

அன்புடன் ஹரி

எழுதியவர் : (4-Jun-12, 1:44 am)
பார்வை : 709

மேலே