நட்பு
விழுந்து விடுவேன் என்ற
பயமில்லை எனக்கு,
தூக்கி விட என் நண்பன் இருக்கிறானென்று !
தோற்று விடுவேன் என்ற
பயமில்லை எனக்கு,
ஆறுதல் சொல்ல என் நண்பன் இருக்கிறானென்று !
துவண்டு விடுவேன் என்ற
பயமில்லை எனக்கு,
தோள் கொடுக்க என் நண்பன் இருக்கிறானென்று !
வானம் பெரிது என்ற
பயமில்லை எனக்கு,
சிறகை விரித்துப் பறக்க நட்பு இருக்கிறதென்று !